கன்னியாகுமரி

முன்னாள் எம்எல்ஏ  ஜான்ஜேக்கப் மர்மச் சாவு

DIN

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை  மர்மமான முறையில் உயிரிழந்தார். 
கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் அருகேயுள்ள படுவூரைச் சேர்ந்த ஜான் ஜேக்கப் (64), கிள்ளியூர் தொகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் 2016 வரை  தொடர்ந்து 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு,  செவ்வாய்க்கிழமை  பிற்பகல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நெய்யூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவர் மாலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜான்ஜேக்கப்  தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களில் ஒரு தரப்பினர் கருங்கல் போலீஸில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.   ஜான் ஜேக்கப்புக்கு மனைவி நிர்மலதா, மகன்  டாக்டர் நிதின் சைமன், மகள் வெர்ஜின்ரோஸ் ஆகியோர் உள்ளனர்.  ஜான்ஜேக்கப், குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. செயலராக இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT