கன்னியாகுமரி

பாறசாலை மகாதேவர் கோயிலில் அஷ்டபந்தன யாகம் நாளை தொடக்கம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பாறசாலை ஸ்ரீ மகாதேவர் கோயிலில் அஷ்டபந்தன கலச யாகம் திங்கள்
கிழமை(ஜன.15) தொடங்கி, ஜன. 25 வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், முளபூஜை, அக்னி ஜனனபூஜை, யாக கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும், முற்பகல் 11.30 மணிக்கு சமய சொற்பொழிவு, பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 8 ஆம் நாள் விழாவான ஜன. 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு புனர்பிரதிஷ்டை நடைபெறும். அதைத் தொடர்ந்து தேவர்களின் சிறப்பு பூஜைக்காக 3 நாள்கள் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.
அந்த நாள்களில் முக்கிய பூஜைகள் கோயில் மண்டபத்தில் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 11ஆம் நாள் விழாவான ஜன. 25 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் ஹோம கலசாபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணிக்கு தத்வ கலசாபிஷேகம், காலை 10.30 மணிக்கு பிரம்ம கலசாபிஷேகம் நடைபெறும். யாக பூஜைகள் கோயில் தந்திரி திருச்சூர் கிழக்கே செறுமுக்கு கெ.சி. நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT