நாகர்கோவிலில் வணிகம் புரிவோர் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தல்
நாகர்கோவில் நகராட்சி எல்லைக்குள் வணிகம் செய்பவர்கள் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகராட்சி எல்லைக்குள் வணிகம் செய்பவர்கள் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் க.சரவணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி, நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் வணிகம், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியில் பதிவு செய்து தொழில்வரி விதிப்பு எண் பெறுவதோடு, உரிய தொழில் வரியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். நகராட்சி ஆய்வில் தொழில் வரி செலுத்தப்படாதது கண்டறியப்பட்டால் சட்டப்படி 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டு வட்டியுடன் சேர்த்து வசூல் செய்யப்படும்.
எனவே, நகராட்சி எல்லைக்குள் தொழில் புரிவோர் அனைவரும் உடனே நகராட்சியில் பதிவு செய்து தொழில் வரி விதிப்பு எண் பெற்று மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.