ரயில் மோதி தச்சுத் தொழிலாளி சாவு
மார்த்தாண்டம் அருகே ரயில் மோதி தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே ரயில் மோதி தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார்.
மார்த்தாண்டம், குழித்துறை ரயில் நிலையம் அருகே புதன்கிழமை மாலையில் ரயில் மோதி இறந்த நிலையில் ஆண் சடலம் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்சேர்ந்த விபனஸ் (18) என்பதும், தச்சுத் தொழிலாளியான இவர் அப்பகுதி வழியாகச் சென்ற ஏதேனும் ரயில் மோதி இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.