கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில் இன்று பந்திருநாழி பொங்கல் வழிபாடு

DIN

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 16) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.
இக்கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 
மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் சுயம்பு எழுந்தருளல் நடைபெறுகிறது. தொடர்ந்து பொங்காலை களத்தில் பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT