கன்னியாகுமரி

திக்குறிச்சி மஹா புஷ்கரம்: மேஷ ராசிக்காரர்கள் திரளானோர் பங்கேற்பு

DIN

திக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் நடைபெற்று வரும் மஹா புஷ்கரம் விழாவில் புதன்கிழமை மேஷம் ராசிக்காரர்கள் திரளானோர் கலந்து கொண்டு, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
விழாவின் 6 ஆவது நாளான புதன்கிழமை மேஷம் ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இதையடுத்து இந்த ராசியை சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து தாமிரவருணி ஆற்றில் நீராடி, திக்குறிச்சி மகாதேவரை வணங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சத்ரு சம்ஹார ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. தொடர்ந்து தாமிரவருணியில் புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் சிறப்பு பூஜைகள் வேத பாராயணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தாமிரவருணி நதிக்கு ஆரத்தி காட்டப்பட்டது.
இவ் விழாவில் குமரி மாவட்டத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் வரும் நாள்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆம் நாள் விழாவான வியாழக்கிழமை காலையில் தட்சிணாமூர்த்தி ஹோமம், ருத்ரஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT