திக்குறிச்சியில் தாமிரவருணி மகா புஷ்கரம் நிறைவு
திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி தீர்த்தப்படித் துறையில் நடைபெற்று வந்த மகா புஷ்கரம் விழா திங்கள்கிழமை மாலையில் நிறைவு பெற்றது.
திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி தீர்த்தப்படித் துறையில் நடைபெற்று வந்த மகா புஷ்கரம் விழா திங்கள்கிழமை மாலையில் நிறைவு பெற்றது.
குருபகவான துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதையடுத்து, விருச்சிக ராசிக்குரிய தாமிரவருணி நதியில் 144 ஆண்டுகளுக்குப் பின் மகா புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சியில் கடந்த 12ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழா நாள்களில் தினமும் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், நதிக்கு ஆரத்தி உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை (அக். 22) காலையில் சங்கல்ப ஸ்நானம், திருவாசக வேள்வி, மகா ருத்ர பாராயணம், சண்டி பாராயணம், ருத்ர ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. மாலையில் தாமிரவருணி நதிக்கு ஆரத்தி நடைபெற்றது.
இவ்விழாவில் செங்கோல் ஆதினம், வேளக்குறிச்சி ஆதீனம், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள்கிழமை கலந்துகொண்டு, நதியில் நீராடி மகாதேவரை வழிபட்டு சென்றனர்.