முகப்பு
கன்னியாகுமரி

காணிமடத்தில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு

அஞ்சுகிராமம் பேரூராட்சி, காணிமடம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:53 AM
பகிர்:

அஞ்சுகிராமம் பேரூராட்சி, காணிமடம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
காணிமடம் சந்திப்பில், மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 3.50 லட்சம் செலவில்  உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு,  பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைகுமார் தலைமை வகித்தார்.  தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பி.சாம்சுரேஷ்குமார் வரவேற்றார்.  உயர்கோபுர மின் விளக்கை ஏ.விஜயகுமார் எம்.பி. இயக்கிவைத்தார். 
இந்நிகழ்வில் மாவட்ட அதிமுக துணைச் செயலர் ஏ.ஞானசேகர்,  மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம்,  மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் ஏ.கனகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.