கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து...
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கேரளத்தில், 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப். 9 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே நடைபெற்ற மும்முனைப் போட்டிக்கான முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியாகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 71 இடங்களைக் கைப்பற்றுவது விதிமுறையாகும். மேலும், சில தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதன்கிழமை (ஏப். 29) மாலை வெளியாகியுள்ளன.
அதன் விவரம்:
1. வோட் லைஃப்
இடதுசாரி கூட்டணி - 58-68
காங்கிரஸ் கூட்டணி - 70-80
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 0-3
மற்றவை - 0
2. ஜேவிசி - டைம்ஸ் நவ்
இடதுசாரி கூட்டணி - 52-61
காங்கிரஸ் கூட்டணி - 72-84
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 3-7
மற்றவை - 0
3. ஆக்சிஸ் மை இந்தியா
இடதுசாரி கூட்டணி - 49-62
காங்கிரஸ் கூட்டணி - 78-90
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 0-3
மற்றவை - 0
4. ஏபிபி-சி வோட்டர்
இடதுசாரி கூட்டணி - 71–77
காங்கிரஸ் கூட்டணி - 62-68
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 0-2
மற்றவை - 0
5. மேட்ரிஸ்
இடதுசாரி கூட்டணி - 60-65
காங்கிரஸ் கூட்டணி - 70-75
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 3-5
மற்றவை - 0
6. பீப்பள்ஸ் பல்ஸ்
இடதுசாரி கூட்டணி - 75-85
காங்கிரஸ் கூட்டணி - 55-65
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 0-3
மற்றவை - 0
7. பி மார்க்
இடதுசாரி கூட்டணி - 62-69
காங்கிரஸ் கூட்டணி - 71-79
தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) - 1-4
மற்றவை - 0 - 3
exit polls for 2026 assembly election for keralam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.