முகப்பு
கன்னியாகுமரி

குமரி மெட்ரிக் பள்ளியில்  கிருஷ்ணஜெயந்தி விழா

நாகர்கோவில்,  குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:55 AM
பகிர்:

நாகர்கோவில்,  குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.  முதல்வர் எ. சாம் அருள் மணி முன்னிலை வகித்தார்.   பள்ளி வளாகத்தில் கிருஷ்ணர் திருவுருவச் சிலை அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மழலையர் பிரிவைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர், மாணவிகள் கிருஷ்ணர், ராதை மற்றும் இந்து புராணத்தில் உள்ள கதாபாத்திரம் வேடம் அணிந்து பெற்றோருடன் கலந்துகொண்டனர்.
மேலும்,  கதாபாத்திரம் சார்ந்த குணநலன் மற்றும் சிறப்பு  பற்றி எடுத்துக் கூறப்பட்டது.  மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்  ராம்குமார் தலைமையில் ஆசிரியைகள் இசக்கியம்மாள்,  தேவகி ஆகியோர் செய்திருந்தனர்.

மீனச்சல் கிருஷ்ண சுவாமி கோயிலில்...
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில்  கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு,  ஞாயிற்றுக்கிழமை உறியடி விழா நடைபெற்றது.
மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது.  விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை குழந்தை பருவ கிருஷ்ணரின் வரலாற்றை விளக்கும் வகையில் உறியடி விழா நடைபெற்றது. 
இந் நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து மதியம் அன்னதானம்,  மாலையில் சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.