முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட   பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 5:05 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட   பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை,  பட்டா பெயர் மாற்றம்,   மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 267 கோரிக்கை  மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை  மாவட்ட  ஆட்சியர்,  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) எம். காமாட்சி,  மற்றும் அனைத்துத் துறை  அரசு  உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.