முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 5:03 AM
பகிர்:

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. 
நாகர்கோவில் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள், சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கட்டடங்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இந்நிலையில்  நாகர்கோவிலில் இருந்து பறக்கை செல்லும் சாலையில இடலாக்குடி பகுதியில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து நாகர்கோவில் முக்கிய சாலைகள், மற்றும் குறுக்கு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.