கன்னியாகுமரி

குமரியில் கொளுத்தும் வெயில்: இளநீர் குலைகளுக்கு கடும் கிராக்கி

DIN

குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், இளநீர் குலைகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
மாவட்டத்தில் மழை ஓய்ந்த நிலையில் கடும் வெயில் நிலவி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் சாலைகளில்  நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக குளிர்பானங்கள், நுங்கு  மற்றும் மற்றும் இளநீர் விற்பனை விறுவிறுப்படைந்து வருகிறது. இதனால் நுங்கு மற்றும் இளநீர் காய்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் குளிர்பானக் கடைகளுக்கு இளநீர் குலைகள் விற்பனை  செய்யும் மொத்த வணிகர்கள், தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து இளநீர் குலைகள் வெட்டுகின்றனர். இதில் போதிய அளவில் குலைகள் கிடைக்காததால் கடும் கிராக்கி நிலவுகிறது.
ரூ. 25 க்கு ஒரு இளநீர் விற்பனை: இதில் இளநீர் குலைகளை சாலையோர குளிர்பானக் கடைகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வணிகர்கள், ஒரு இளநீர் காயை ரூ. 25 முதல் ரூ.  30 க்கு வரை விற்பனை செய்கின்றனர். கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT