கன்னியாகுமரி

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க குமரி - தில்லி வரை பெண்கள் பிரசாரப் பயணம்

DIN


வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு அமைப்புகள் சார்பில் தில்லி நோக்கிய பெண்களின் வாகன பிரசாரப் பயணம் கன்னியாகுமரியில் சனிக்கிழமை தொடங்கியது.
பெண்களுக்கு கல்வி வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் களையப்பட வேண்டும், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் வேண்டும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அழித்தொழிக்கப்பட வேண்டும், அரசியல் அதிகார அமைப்புகளில் பெண்களுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடங்கிய இப்பிரசாரப் பயணத்துக்கு தேசியச் செயலர் நிஷாசிந்து தலைமை வகித்துச் செல்கிறார்.
தொடக்க விழா நிகழ்வுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குர்ஷியா காந்தி தலைமை வகித்தார். நன்னிலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி வரவேற்றார். பெண்கள் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலர் ஆனிராஜா பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக செல்லும் பிரசார பயணம் வரும் அக். 13ஆம் தேதி தில்லியில் நிறைவடைகிறது. இந்தியாவின் ஐந்து பகுதிகளில் இருந்து வரும் பிரசாரப் பயணங்களும் ஓரிடத்தில் சங்கமித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் மாநிலத் தலைவர் ஆர். சுசிலா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT