கன்னியாகுமரி

குலசேகரம் சாரதா கிருஷ்ணா கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவத் தந்தை பிறந்த தினம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா  ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், ஹோமியோபதி மருத்துவத்தின்

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா  ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹனிமனின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் தலைவர் சி.கே. மோகன் குத்துவிளக்கு ஏற்றினார். முதல்வர் என்.வி. சுகதன், சாமுவேல் ஹனிமனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரதாஸ் தலைமை வகித்தார். குளோபல் ஹோமியோபதி பவுண்டேஷன் துணைத் தலைவர் ஜெயேஷ் வி. சாங்வி ஆகியோர் பேசினர். கேரள மாநில ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ரவி எம். நாயர் உறுதிமொழி வாசித்தார். கல்லூரியின் பேராசிரியர்கள் எம். முருகன், வி. சதீஸ்குமார், மாணவி ஆர். பக்தமீரா, பயிற்சி மருத்துவர் அம்மு ஜே.விஜயன் ஆகியோர் புகழஞ்சலி உரை ஆற்றினர். 
மருந்தியல்துறை துணைத் தலைவர் கே.ஜி. வேணுகோபால் வரவேற்றார்.  பேராசிரியர் வி.  மனோஜ் நாராயணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT