கன்னியாகுமரி

முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி: இளம் வாக்காளர்கள் பேட்டி

DIN

தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முதல் முறை வாக்களிப்பதற்கு தகுதியானவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர்.   இவர்களில் பலர் வியாழக்கிழமை காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பெண்கள் பலரும் வாக்களித்து விட்டு வெளியே வந்ததும், கையில் மையுடன் கைப்படம் எடுத்து அதை முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் அனுப்பி மகிழ்ந்தனர். 
அகஸ்தீசுவரம் அரசுத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்த இளம் வாக்காளர் சபிதா கூறியது: நான் முதன்முதலாக வாக்களித்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தந்தது. தொடர்ந்து வரும் தேர்தல்களிலும் தவறாமல் வாக்களிப்பேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT