கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே ரப்பர் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

DIN

திருவட்டாறு அருகே ரப்பர் கடையில் புகுந்து  ரூ. 1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (42). அப்பகுதியில் ரப்பர் கடை நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை மதியம், கடையின் ஷட்டரை பாதி மூடி வைத்துவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் கடைக்குத் திரும்பியபோது, மேசை திறந்து கிடந்துள்ளது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஹோட்டலில் திருட்டு: களியல் அருகே சிற்றாறு அணையின் கரைப் பகுதியான சங்கரன்கடவு என்ற இடத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் வல்சலம். இவர் தனது ஹோட்டலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் மூடி விட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமை காலையில் ஹோட்டலைத் திறந்த போது மேசையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 ஆயிரம்  மற்றும் குளிர்பானங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் வல்சலம் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT