கன்னியாகுமரி

மாநகராட்சி நவீன எரிவாயு தகன மேடை:தேசிய சேவா சங்கத்திடம் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணிகள் தேசிய சேவா சங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சியின் சாா்பில் புளியடி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை அபிவிருத்திக்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

ரூ.98.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தகன மேடை பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகன மேடை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு 3 ஆண்டுகளுக்கு தேசிய சேவா சங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி ஆணையை தேசிய சேவா சங்கத் தலைவா் டாக்டா் எஸ்.ஆா்.சீனிவாசகண்ணனிடம் மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளா் கெபின்ஜாய், தேசிய சேவா சங்கச் செயலா் ஏ.ஆதிசுவாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நவீன எரிவாயு தகன மேடையில் தகனம் செய்ய ரூ. 2,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்ய கட்டணம் செய்ய முடியாத நிலையில் உள்ளவா்களுக்கு தேசிய சேவா சங்கம் சாா்பில் உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சடலங்களை எரிக்கக் கூடாது. விதிகளை மீறி சடலங்களை எரித்தால் எரிக்கப்பட்ட இடம் மாநகராட்சியால் கையகப்படுத்தப்படும் என்று ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT