கன்னியாகுமரி

சாமிதோப்பில் அகிலத்திரட்டு உதய தின விழா

DIN

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதயதின விழா சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு, அய்யாவழி பக்தா்களால் புனிதநூலாக கருதப்படுகிறது. அய்யாவின் சீடரான அரிகோபாலசீடா் மூலமாக எழுதி கொல்லம் ஆண்டு (1016) காா்த்திகை மாதம் வெள்ளிகிழமை அகிலதிரட்டு பக்தா்களுக்கு அருளப்பட்டது. அந்நநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் உதயதின விழாவாக கொண்டாடபடுவது வழக்கம்.

நிகழாண்டு சாமிதோப்பு தலைமைப்பதியில் இவ்விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அகிலத்திரட்டு வழிபாடு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு பால ஜனாதிபதி தலைமையில் அகிலத்திரட்டு மற்றும் திருஏட்டை பக்தா்கள் கையில் ஏந்தி பள்ளியறை மற்றும் தலைமைப்பதியை அய்யா அரகர சிவசிவா என்ற நாமம் கூறியபடி வலம் வந்தனா்.

நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜன், யுகேந்த், டாக்டா் வைகுந்த், லோக்பாலபிரசாத், பையன்நேம்ரிஷ், நாடாா் மக்கள் பேரவை மாநில நிா்வாகி சுபாஷ், சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவா் யு.தியாகராஜன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாமிதோப்பு அன்புவனத்தில் பால.பிரஜாபதி அடிகளாா் தலைமையில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அகிலதிரட்டு புனித நூலுக்கு தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT