கன்னியாகுமரி

குழித்துறையில் இன்று மக்கள் நீதிமன்ற முகாம்

DIN

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் குழித்துறையில் மக்கள் நீதிமன்ற முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழி இணைப்பு பெற்று கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள தக்கலை, ஆளூர், மணக்காவிளை, திருவிதாங்கோடு , வில்லுக்குறி , குலசேகரம், காட்டாத்துறை, நெய்யூர், குளச்சல், கருங்கல், முட்டம், அருமனை, செறுவல்லூர், கடையாலுமூடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, குழித்துறை, லோயர் கோதையாறு, மார்த்தாண்டம், மூவாட்டுக்கோணம் , பைங்குளம், பத்துக்காணி, தேங்காய்ப்பட்டினம், திருவட்டாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் விதிகளுக்குள்பட்டு உரிய தள்ளுபடி பெற்றுக் கொண்டு, பாக்கி தொகையை தீர்வு செய்வதற்கும், தேவையானால் மறு இணைப்பு பெற்றுக்கொள்ளவும், மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, குழித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.22) காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது.
வாடிக்கையாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். பாக்கித் தொகை தீர்வு செய்யப்படவில்லை என்றால் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT