கன்னியாகுமரி

விவேகானந்தர் சிலைக்கு மரியாதை

DIN


சுவாமி விவேகானந்தரின் 156 ஆவது ஜயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் அவரது சிலைக்கு 
சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
இதையொட்டி, விவேகானந்த கேந்திரத்தின் தலைமை நிலையச்செயலர் ரகுநாதன், நிர்வாகஅதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் அவினாஷ் மற்றும் ஊழியர்கள் படகில் விவேகானந்தர் சிலைக்கு சென்றனர். சிலை முன்பு அமர்ந்து பிரார்த்தனை மேற்கொண்ட அவர்கள் பகவத்கீதை பாராயணம் செய்தனர். பின்னர், சுவாமி விவேகானந்தர் சிலையின் கால் பாதத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விவேகானந்த கேந்திர பள்ளி: விவேகானந்த கேந்திர மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளியின் முதல்வர் ஆபிரகாம்லிங்கன் தலைமையில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று கேந்திரத்தின் வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதாகட்சியின் அகஸ்தீசுவரம் ஒன்றிய இளைஞரணித் தலைவர் ராஜன், பொதுச்செயலர் ராஜலிங்கம், மாவட்ட செயலர் விசு, கன்னியாகுமரி மண்டலத் தலைவர் சுடலைமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். குமரி கடலிலுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. முன்னதாக விவேகானந்த கேந்திரத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கன்னியாகுமரியிலுள்ள பகவதியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT