மத்திகோடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமை வகித்து 27 பேருக்கும் அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தலைமையாசிரியர் டேவிட் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் பொதுச்செயலர் எட்வின் ஜோஸ், ஆசிரியர்கள் சந்திரா, ஜாண்சன்,வல்சலம், ஜூலியட் மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.