கன்னியாகுமரி

குலசேகரம் பேரூராட்சியில் 2ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குலசேகரத்தில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

DIN


குலசேகரத்தில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
குலசேகரம் பேரூராட்சிக்குள்பட்ட பொதுச்சந்தை மற்றும் நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பேரூராட்சி நிர்வாகத்தால் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இப்பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில், சந்தை சந்திப்பில் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் படிக்கட்டுகள், கூரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில் சில கடைகளின் உரிமையாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்றது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என  பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT