கன்னியாகுமரி

தக்கலையில் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

DIN

குமரி மாவட்ட ஊழல்  எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தக்கலையில் நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் சி.பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ். நாகப்பன் முன்னிலை வகித்தார். குளச்சல் நகரத் தலைவர் முகம்மது சபீர் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலர்  லெனின் அறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாவட்டத் தலைவர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். 
விழாவில், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் சி.சுரேஷ்,  ராஜாக்கமங்கலம் வட்டாரத் தலைவர் அசோக்குமார், நாகர்கோவில் நகரத் தலைவர் சேவியர், தக்கலை நகரத் தலைவர் பாரூக், வட்டார நிர்வாகிகள் ரெஞ்சன்,  ஜான்பீட்டர்,  கோபாலன், ராதா,  மாவட்ட இணைச் செயலர் டி.ஜே.சீலன், பாதுகாப்பு அணி அமைப்பாளர் உமா மகேஷ்வரி மற்றும் ஷைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்மநேசன் நன்றி கூறினார்.  
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து மக்கள்  மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT