கன்னியாகுமரி

களியக்காவிளை கடைகளில் சோதனை: 19 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

DIN

களியக்காவிளை பகுதியிலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில்  19 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள  நிலையில், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் களியக்காவிளை சந்திப்பு மற்றும் அதையொட்டிய கடைகள், வர்த்தக நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அதில், 5 கடைகளிலிருந்து 19 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளுக்கு ரூ. 1,750 அபராதம் விதிக்கப்பட்டது. இப் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை கண்டறியும் வகையில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT