கன்னியாகுமரி

உலக காசநோய்தின விழிப்புணர்வு பேரணி

கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு  பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு  பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. 
இப்பேரணியை பள்ளியின் தலைமையாசிரியை  கலாசுதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. 
இதில், பத்மநாபபுரம்  நகர்ப்புற  அரசு ஆரம்ப சுகாதார  நிலைய மருத்துவர்  லாரன்ஸ் , காசநோய்ப் பிரிவு  மருத்துவர்  அஹ்மது கபீர், காசநோய் களப் பணியாளர்கள் சோபி, சிவநேசன், லிங்கஷோபா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு தலைமையாசிரியை தலைமை வகித்தார்.  காசநோய் தடுப்பு குறித்து மருத்துவர்கள் பேசினர். இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
ஆசிரியர் பெர்லின் கிறிஸ்டோபர் வரவேற்றார். ஆசிரியர் முருகதாஸ்  நன்றி கூறினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT