கன்னியாகுமரி

மார்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்

DIN

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  குமரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் பல்வேறு வாகனங்கள் இயங்கி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனடிப்படையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் கே. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் அலுவலர்கள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், களியக்காவிளையில் உரிய வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட 2 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு தலா ரூ. 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.   இதே போன்று அதிக பாரம் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உரிய தகுதிச் சான்று பெறாமல் இயக்கப்பட்ட 3 லாரிகள், அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 2 கேரள பதிவெண் கொண்ட வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT