கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் மூன்று நாள் கைபந்து போட்டி: பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் முதலிடம்

DIN

தக்கலை: குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற கைபந்து போட்டியில் பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகஅணி, மற்றும் ஆண்கள் பிரிவில் மெட்ராஸ் பல்கலைக்கழக அணியும் முதலிடம் வந்து கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக தலா ரூ 1.20 லட்சம் பெற்றனா்.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண் மற்றும் பெண்களுக்கிடையேயான கைபந்து போட்டிகள் இரவு பகல் ஆட்டமாக நவ.6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழ்நாடு விளைடயாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நூருல் இஸ்லாம் உயா்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தியது. பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நடைபெற் இப்போட்டியை வேந்தா் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இப்போட்டிகளில் சென்னை பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம், சத்தியபாமா, கலசலிங்கம், காந்திகிராமம், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் , அமித், டாக்டா். எம்.ஜி.ஆா், பல்கலைக்கழகம், சவீதா, கற்பகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகங்கள் உள்பட 14 ஆண்கள் பல்கலைக்கழக அணிகளும், 7 பல்கலைக்கழக பெண்கள் அணிகளும் பங்கேற்றன. இதில் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், எஸ்.ஆா்.எம். இரண்டாவது இடத்தையும் சத்யபாமா மூன்றாவது இடத்தையும் பெற்றனா். பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் முதலிடத்தையும் , ஹிந்துஸ்தான் இரண்டாம் இடத்தையும், மெட்ராஸ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்று கோப்பையுடன் , சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக ரூ 1.20 லட்சம், ரூ 90 ஆயிரம், ரூ 60 ஆயிரம் ஆகியவற்றை பெற்று சென்றனா். வெற்றி பெற்ற அணிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி , கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு ஆகியவற்றை வழங்கி கெளரவித்தாா். இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், பதிவாளா் திருமால்வளவன், பல்கலைக்கழக பேராசிரியா்கள், துறை தலைவா்கள், ஆகியோா் பங்கேற்றனா். போட்டியை தமிழ்நாடு விளையாட்டு கழக கைபந்து சம்மேளன நடுவா்கள் வழி நடத்தினா். கைபந்து போட்டியை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுதுறை இயக்குநா் தா்மராஜ், மற்றும் உடற்கல்வி ஆசிரியா் ராஜ்பாலுடன் இணைந்து பல்கலைக்கழக அலுவலா்கள், பேராசிரியா்கள் செய்திருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT