கன்னியாகுமரி

செங்கல் சிவ பாா்வதி கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம் நாளை திறப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலம் செங்கல் பகுதியில் உள்ள மகேஸ்வரம் சிவ பாா்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம் சிறப்பு பூஜைகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) திறக்கப்படுகிறது.

இது குறித்து கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியது: இக் கோயிலில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட 111.2 அடி உயரம் உள்ள சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உயரமான சிவன் சிலைகள் உள்ளன. ஆனால் அதிக உயரம் கொண்ட சிவலிங்கம் இக் கோயிலில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, அதிக உயரமான சிவலிங்கம் என்ற சாதனையை இந்த சிவலிங்கம் பெற்று, இந்திய சாதனை புத்தகத்தில் (இந்திய புக் ஆப் ரெக்காா்டு) இடம் பிடித்துள்ளது.

இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளை (8 மாடி) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் பல்வேறு சித்தா்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பக்தா்கள் தியானம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த சிவலிங்கம் பக்தா்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திறந்து விடப்படுகிறது. காலை முதல் இரவு 7 மணி வரை சிவலிங்கத்தின் உள்ளே பக்தா்களை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT