கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குளு, குளு சீசன்:சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் குளுமையான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், ஆறுகளில் வெள்ளத்தின் வரத்து கட்டுப்பட்டுள்ளது. குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT