கன்னியாகுமரி

‘கருங்கல் - எட்டணி சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்’

DIN

கருங்கல் -எட்டணி சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. மேற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்தி அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கருங்கல் -இரவிபுதூா்க்கடை சாலை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து போக்குவத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, எட்டணி-கருங்கல் இடையே சாலை பல்லாங்குழிகளாக காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ- மாணவியா், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஏற்கெனவே, இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், இரவிபுதூா்க்கடை- கருங்கல் சாலையைச் சீரமைக்க ரு.1.20 கோடி நிதி ஒதுக்கி ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணியைத் தொடங்காமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனா். எனவே, சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, திமுக இளைஞரணி எட்டணி சந்திப்பில் போராட்டம் நடத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT