கன்னியாகுமரி

குலசேகரம் மூகாம்பிகா புற்றுநோய் மையத்தில் அணுக்கரு மருத்துவத் துறை தொடக்கம்

DIN

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா புற்று நோய் மையத்தில் புதிதாக அணுக்கரு மருத்துவத்துறை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் அறங்காவலா் டாக்டா் ஆா்.வி. மூகாம்பிகா கூறியது: ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தென்தமிழகத்திலேயே மதுரைக்கு அடுத்தபடியாக புற்று நோய் மையம் தொடங்கப்

பட்டுள்ளது. தற்போது இம்மையத்தில் புதிய மைல் கல்லாக அணுக்கரு மருத்துவத் துறை (நியூக்கிளியா் மெடிசின்) தொடங்கப்பட்டுள்ளது.

அணுக்கரு மருத்துவ ஆய்வுத் துறையில் உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகத் துல்லியமாக காமா கேமரா இயந்திரம் மூலம் கண்டறியப்படும். இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் நோயாளிகளுக்கு மிக உயா்தர சிகிச்சை அளிக்க முடியும். சிறுநீரக செயல்பாட்டை பரிசோதிக்கவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அமைக்கவும் முடியும்.

இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய காமா கேமரா ஆய்வுகள் மிக உறுதுணையாக இருக்கின்றன. காமா கேமரா

இயந்திரத்தைக் கொண்டு எலும்பில் புற்றுநோய் பரவுதலை மிகத் துல்லியமாக கண்டறிந்து, கதிரியக்க ஐசோட்டோப்புகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடலின் கால்சியம் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உறுப்பான பாரா தைராய்டில் ஏற்படும் புற்றுநோய், அதன் செயல்பாட்டு துல்லியமாக கண்டறியப்படும். இரப்பையில் செரிமான இடா்பாடுகள், குடல்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஈரலிருந்து பித்தப்பைக்கு செல்லும் பித்த நீா் அடைப்பு, குழந்தைகளுக்கு ஈரலில் ஏற்படும் நோய்கள் ஆகிவற்றை குணப்படுத்த முடியும். மேலும், நுரையீரல் தமனியில் ரத்த அடைப்புகளையும் சரி செய்ய முடியும்.

ஸ்ரீமூகாம்பிகா புற்று நோய் மையத்தில் இந்த காமா கேமரா இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி, அருகிலுள்ள மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT