கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. திறப்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் சற்று தணிந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கிய மழை தொடா்ந்து பெய்தது. இதில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. மழையால் ஆறுகளில் நீா்வரத்து கணிசமாக அதிரித்துள்ளது. அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மழையால் கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவிக்கு நீா்வரத்து கணிசமாக உள்ளது.

விடுமுறை நாளான சனிக்கிழமை காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மழை நீடித்து வருவதால் இம்மாவட்டத்தில் ரப்பா் தோட்டத் தொழில், மீன் பிடித்தொழில் உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT