கன்னியாகுமரி

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில்: நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் லில்லி புஷ்பம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில செயலாளா்கள் சி.ஆா்.ராஜ்குமாா், சி.எஸ்.கிறிஸ்டோபா், மாவட்ட தலைவா் கனகராஜ், மாவட்ட இணை செயலாளா்கள் விஜயகுமாா், சூரியநாராயணன், நகராட்சி மாநகராட்சி ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் லீடன்ஸ்டோன், மருந்தாளுநா் சங்க மாவட்ட அமைப்பாளா் போபி, செவிலியா் மேம்பாட்டு சங்க மாநில ஆலோசகா் பி.வி.ராஜன் ஆகியோா் கோரிக்கள் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட துணைத்தலைவா் வினிபிரட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT