கன்னியாகுமரி

அஞ்சுகிராமம் பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

DIN

அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்ற தடை உள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில், பயிற்சி உதவி ஆய்வாளர் எபினேசர் உள்ளிட்ட போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மருங்கூரை அடுத்த சுண்டவிளை பகுதியில் உள்ள ஒரு கோயிலிலும், மயிலாடி அடுத்த கோட்டவிளை பகுதியில் உள்ள ஒரு கோயிலிலும் நீதிமன்ற உத்தரவை மீறி உயர் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT