கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சியில் பேரூராட்சி உதவி இயக்குநா் ஆய்வு

DIN

களியக்காவிளை: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊா் திரும்பியவா்களை கண்டறிந்து அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவ்வாறு களியக்காவிளை பேரூராட்சியில் 10 க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்த வீடுகளில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா். பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளா் விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT