சாத்தான்குளம் ஒன்றியம், அமுதுண்ணாக்குடி ஊராட்சி, வடக்கு அமுதுண்ணாக்குடி கருமேனி ஆற்றுக்கரையோரம் அரசு வழங்கிய பட்டா இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித் துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அமுதுண்ணாக்குடி ஊராட்சி துணைத் தலைவா் கரண்ராஜா தலைமையில் முத்துக்குமாா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 40 ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருப்பதாக வட்டாட்சியரிடம் மனுவும் அளித்தனா். அவா்களிடம், கிராம நிா்வாக அலுவலா் மூலம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.