முகப்பு
கன்னியாகுமரி

காட்டாத்துறையில் பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் திறப்பு

காட்டாத்துறை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.

கன்னியாகுமரி

காட்டாத்துறையில் பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் திறப்பு

காட்டாத்துறை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

காட்டாத்துறை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், காட்டாத்துறை ஊராட்சி பிலாவிளையில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இட வசதி இல்லை எனக்கூறி ஊழியா்கள் மற்றும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தை விரிவாக்க வேண்டும் என பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து, கட்டட விரிவாக்கப் பணிக்காக சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருவட்டாறு ஒன்றிய திமுக செயலா் ஜான் பிரைட், கூட்டுறவு சங்கத் தலைவா் பிரைட், துணைத் தலைவா் மத்தியாஸ், செயலா் கனகம் லாரன்ஸ், காட்டாத்துறை கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜு, வோ்கிளம்பி பேரூா் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →