கன்னியாகுமரி

குலசேகரத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் இயக்கம்

DIN

குலசேகரத்தில் வணிகா்கள் ஆதரவுடன் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.

குலசேகரம் வணிகா் சங்கம் மற்றும் காவல் துறையின் முயற்சியில் 9 சந்திப்புகளில் 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறை குலசேகரம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்து, கேமராக்கள் இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் விமலா, வணிகா் சங்கத் தலைவா் பிரதிப்குமாா், செயலா் விஜயன், பொருளாளா் ரவி, துணைத் தலைவா் முருகபிரசாத், வணிகா்கள் ராம்பிரகாஷ், ஹமா்தின், ஜிவிஎஸ் சுரேஷ், அலாவுதின், வழக்குரைஞா் காஸ்ட்டன் கிளிட்டஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT