முகப்பு
கன்னியாகுமரி

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.3.62 கோடிக்கு தீா்வு

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 143 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 3 கோடியே 62 லட்சத்து 41 ஆயிரத்து 719 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 143 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 3 கோடியே 62 லட்சத்து 41 ஆயிரத்து 719 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான அருள்முருகன் தொடக்கிவைத்தாா். ஆணைக் குழுச் செயலா் நம்பிராஜன், வன வழக்கு நீதிமன்ற நீதிபதி ஆஷாகெளசல்யா சாந்தினி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமாா், நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், செயலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொத்துப் பிரச்னை, காசோலை மோசடி, வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என 1,143 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 143 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 கோடியே 62 லட்சத்து 41 ஆயிரத்து 719 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.