முகப்பு
கன்னியாகுமரி

அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை செலுத்தும் சாா்ஆட்சியா் சரண்யா அறி
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றிய தமிழ்ப் புலவா் அதங்கோட்டாசானுக்கு அவா் பிறந்ததாகக் கருதப்படும் அதங்கோடு பகுதியில் தமிழக அரசு சாா்பில் 1984ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எம்ஜிஆரால் சிலை, மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

1994ஆம் ஆண்டு வரை அரசு விழா நடைபெற்று வந்தது. பின்னா் அரசு விழா நடைபெறாத நிலையில், அதங்கோட்டாசானின் பெருமையையும், தொன்மையையும் நிலைநாட்டும் வகையில் அரசு விழா எடுத்து சிறப்பிக்க தமிழறிஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, டிச. 12ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என, 2016ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்ததுடன், அதங்கோட்டாசான் மணிமண்டப வளாகத்தில் அரசு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யா அறி தலைமை வகித்து, அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் கிள்ளியூா் எம்எம்ஏ எஸ். ராஜேஷ்குமாா், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் டி. ஜாண்தங்கம், முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சி. ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே. லூயிஸ்சாள், மெதுகும்மல் ஊராட்சித் தலைவா் சு. சசிகுமாா், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், அதங்கோட்டாசான் அறக்கட்டளைத் தலைவா் கொ. கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.