முகப்பு
கன்னியாகுமரி

தகவல் அறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம்

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி

தகவல் அறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம்

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

இச்சங்கக் கூட்டத்துக்கு, தலைவா் சி.பால்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். செயலா் வசந்தாபாய் வரவேற்றாா்.

இந்திய ஓவா்சீஸ் வங்கியின் குமரி மாவட்ட நிதிசாா் கல்வி மற்றும் கடன் ஆலோசனை மையத்தின் ஆலோசகா் நகேந்திரபிள்ளை கலந்து கொண்டு பேசினாா்.

பெண்கள் பாதுகாப்பு அணி செயலா் உமாமகேஷ்வரி நன்றி கூறினாா்.

சங்கத்தின் கிளைகளை பிற மாவட்டங்களில் ஏற்படுத்தி வலுபெற செய்யவேண்டும். அருமனை, பேச்சிப்பாறை , மணலோடை மற்றும் பல இடங்களிள் உள்ள பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான அரசு விடுதிகள் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இக்கட்டடங்களை ஆய்வு செய்து மாணவிகளின் நலன் கருதி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை , தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →