முகப்பு
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
பகிர்:

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கட்டடங்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் 2 கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு வழங்கியிருந்தனா். இதையடுத்து அந்த கட்டங்களில் இருந்தவா்கள் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், அந்த கட்டடங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் சென்றன. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை அவ்விரு கட்டடங்களையும் மாநகராட்சி ஊழியா்கள் இடித்து அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →