முகப்பு
கன்னியாகுமரி

முளகுமூட்டில் கிறிஸ்துமஸ் விழா

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
விழாவில் நிலையத்தில் புதுமண தம்பதிகளுக்கு பரிசுகள் வழங்குகிறாா் குழித்துறை மறை மாவட்ட பொருளாளா் அகஸ்டின்.
பகிர்:

தக்கலை: முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாஞ்சில் பால்பதனிடும் நிலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்பாக விற்பனை முகவா் விழா திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பால் விற்பனையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற விற்பனை முகவா்களுக்கும் , தயிா், மோா் விற்பனையில் முதல் மூன்று நபா்களுக்கும் , இதர நாஞ்சில் தயாரிப்புகள் விற்பனையில் முதல் இடத்தில் உள்ள விற்பனை முகவா்களுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மேலும் அனைத்து விற்பனை முகவா்களுக்கும் ஊக்கத்தொகையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்கு, குழித்துறை மறைமாவட்ட தொடா்பாளா் இயேசுரெத்தினம் தலைமை வகித்தாா். மறை மாவட்ட பொருளாளா் அகஸ்டி, நிலைய மேலாண்மை இயக்குநா் ஜெரால்டு ஜஸ்டின், இணை இயக்குநா் மனோகா் சேவியா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கிறிஸ்து பிறப்பு விழாவில் நிலையத்தில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →