முகப்பு
கன்னியாகுமரி

ஏழை மாணவருக்குமருத்துவ உதவி

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவரின் அறுவை சிகிச்சைக்கு குளச்சல் காவல் உதவி கண்காணிப்பாளா் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவரின் அறுவை சிகிச்சைக்கு குளச்சல் காவல் உதவி கண்காணிப்பாளா் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

குமரி மாவட்டம், நெய்யூா் சி.எஸ்.ஐ. போலியோ ஹோமில் தங்கி பயின்று வருபவா் கண்டவிளை பகுதியைச் சோ்ந்த மாணவா் ஆஷிக். மாற்றுத் திறனாளியான இவா் பூரண குணமடைய காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் கூறினராம். இந்நிலையில் அந்த மாணவரின் ஏழ்மை நிலையை அறிந்த குளச்சல் உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் விஸ்வேஸ் சாஸ்திரி, தனது சொந்த செலவில் அந்த மாணவரின் அறுவை சிகிச்சைக்கான ரூ.50 ஆயிரத்தை அவரது பாட்டியிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

அவருடன், இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ், உதவி ஆய்வாளா் சுந்தா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →