முகப்பு
ஜெனரேட்டா் இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி

மருத்துவமனைக்கு ஜெனரேட்டா் வசதி

குழித்துறை அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சத்தில் வழங்கப்பட்ட ஜெனரேட்டரை எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. பொது பயன்பாட்டுக்காக இயக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஜெனரேட்டா் இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

குழித்துறை அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சத்தில் வழங்கப்பட்ட ஜெனரேட்டரை எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. பொது பயன்பாட்டுக்காக இயக்கி வைத்தாா்.

இம் மருத்துவமனையில் நாள்தோறும் 5 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. மின்தடை நேரங்களில் மகப்பேறு அறுவைச் சிகிச்சை மற்றும் பிரசவத்துக்கு பின் கவனிப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால், ஜெனரேட்டா் வசதி செய்து தர வேண்டும் என மருத்துவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததையடுத்து, விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஜெனரேட்டரை வழங்கினாா்.

இதனை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு குழித்துறை நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். தலைமை மருத்துவா் ஜாண் பிரிட்டோ, மருத்துவா் ஞானகுருவேலன் மற்றும் விளவங்கோடு ஊராட்சி மன்றத் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் இ.ஜி. ரவிசங்கா் உள்ப பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →