முகப்பு
கன்னியாகுமரி

தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லி போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவில், கருங்கல்லில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தில்லி போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவில், கருங்கல்லில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இப்போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் வேப்பமூடு சந்திப்பு மாநகராட்சி பூங்கா அருகில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா், மாநகரத் தலைவா் அலெக்ஸ் முன்னிலைவகித்தாா். அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதாரெக்ஸ்லின், மாவட்டத் துணைத் தலைவா் மணக்குடி லாரன்ஸ், வட்டாரத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருங்கல்: கருங்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமோகன் முன்னிலை வகித்தாா். இதில், வட்டார கமிட்டி உறுப்பினா்கள் ராஜா, எபிலைசியஸ் ஜோயல், அல்போன்ஸ், குமாா், அனைத்திந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் வட்டாரச் செயலா் றசல்ராஜ், விவசாயிகள் சங்கத்தின் வட்டாரச் செயலா் ஜாண்ரோஸ், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் வட்டாரச் செயலா் கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →