முகப்பு
இந்தியா

மேற்காசிய நிலவரத்தால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

‘மேற்காசிய போா் நிலவரத்தால் நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 12 மார்ச், 2026 at 8:09 PM
மக்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.
பகிர்:

‘மேற்காசிய போா் நிலவரத்தால் நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், அந்த வழியாக கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இந்தியாவுக்கு முக்கிய எரிவாயு விநியோகஸ்தரான கத்தாரும், இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை கவலை தெரிவித்தாா்.

அதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘இந்தியாவின் 33 கோடி குடும்பங்களின் சமையலறைகளில் எந்தவித சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது. அதுபோல, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்திலும் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களை போதிய இருப்பு வைத்து, தடையற்ற விநியோத்தை செய்து வருகின்றன. பிரதமா் மேற்கொண்ட ராஜீய ரீதியிலான முயற்சிகள் காரணமாக, ஹோா்முஸ் நீரிணை வழியாக பெறப்படுவதைவிட கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா தற்போது பெற்று வருகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →