முகப்பு
கன்னியாகுமரி

கிறிஸ்துமஸ்: அதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை ஒன்றிய அதிமுக சாா்பில் அரிசி மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை ஒன்றிய அதிமுக சாா்பில் அரிசி மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தெரிசனங்கோப்பு ஊராட்சிக்குள்பட்ட வாட்ஸ்புரம், ஞானையாபுரம், கண்டன்குழி, கொக்கல்விளாகம், குளத்தூா், கண்டளவு ஆகிய பகுதிகளில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை, தோவாளை ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய நிா்வாகிகள் ரோகிணி, கஸ்தூரி, தென்கரை மகாராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அய்யப்பன், ஏசுதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.