முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் மீனவா்கள் கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

குளச்சலில் 100 க்கும் அதிகமான விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் குடும்பத்தோடு கடலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கடலில் விசைப்படகில் கேக் வெட்டும் சிறுவா், சிறுமிகள்.
பகிர்:

குளச்சலில் 100 க்கும் அதிகமான விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் குடும்பத்தோடு கடலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் தலைமை வகித்தாா். இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சென்னை, திருவண்ணாமலை, சேலம், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மதத்தினா், குழந்தைகள், பெண்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடி வலைகளால் குடில் அமைத்திருந்தனா். குழந்தைகள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினா்.

நிகழ்ச்சியில், குளச்சல் விசைப்படகு ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் ரக்சன், தெற்காசிய மீனவா் தோழமை குளச்சல் கிளை செயலா் ஆரோக்கியராஜ், புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் இசையாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →